உலக சோசலிச வலைத் தளத்தின் புத்தாண்டு நிதியத்திற்கு உங்களால் இயன்ற அளவு பாரியளவில் நன்கொடை வழங்குமாறு, நான் இன்று உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்.
2026-ஆம் ஆண்டின் முதல் வாரங்கள் வரலாற்றின் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளன. மினியாபோலிஸில், மத்தியிலுள்ள கூட்டாட்சி அரசாங்கத்தின் அதிகாரம் மக்களுக்கு எதிராக ஏவி விடப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) அதிகாரி ஒருவர் ரெனீ நிக்கோல் குட் என்பவரை மிக அருகாமையில் இருந்து சுட்டுக் கொன்றார். இதை ட்ரம்ப் நிர்வாகம் நியாயப்படுத்தியுள்ளது. அந்த நகரம் தற்போது துணை-இராணுவத்தின் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது. ட்ரம்ப் கிளர்ச்சிச் சட்டத்தை அமல்படுத்தப் போவதாக அச்சுறுத்தியதோடு, இராணுவத்தை களமிறங்குவதற்கு தயார் நிலையில் வைத்துள்ளார். டாவோஸில் கூடியிருந்த பில்லியனர் தன்னலக்குழுக்களிடம் பேசிய ட்ரம்ப், “சில நேரங்களில் உங்களுக்கு ஒரு சர்வாதிகாரி தேவைப்படுவார்” என்று அறிவித்தார். மினியாபோலிஸில் நடக்கும் இந்த வன்முறை ஒடுக்குமுறை என்பது, அமெரிக்க உரிமைகள் சட்டத்தை தூக்கியெறிவதற்கான ட்ரம்ப்பின் திட்டத்தை செயல்படுத்துவதே ஆகும்.
மினியாபோலிஸிலும் மற்ற அமெரிக்க நகரங்களிலும் நடப்பவை, பல முனைகளில் போர் தொடுத்து வரும் ஒரு அரசாங்கத்தின் உள்நாட்டு முகமாகும். ஜனவரி 3 அன்று, ட்ரம்ப் நிர்வாகம் வெனிசுவேலா மீது ஆத்திரமூட்டப்படாத ஆக்கிரமிப்பைத் தொடங்கியது. இதில் பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு, ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கடத்தப்பட்டார். சில நாட்களுக்குப் பிறகு, ஈரான் மீது குண்டுவீசுவோம் என்ற அச்சுறுத்தல்களும், கிரீன்லாந்தை பலவந்தமாக இணைத்துக்கொள்ளும் நோக்கத்தின் மறுஉறுதிப்பாடுகளும் வந்தன. கனடாவுக்கு எதிராகவும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.
வெளிநாடுகளில் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறையும், உள்நாட்டில் மேற்கொள்ளப்படும் ஒடுக்குமுறையும் ஒரே மூலத்திலிருந்து, அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியிலிருந்து, இந்த நாட்டிலும் சர்வதேச அளவிலும் நிலவும் அதிர்ச்சியூட்டும் அளவிலான சமூக சமத்துவமின்மையிலிருந்து வருகின்றன. இந்த வாரம் வெளியான ஒக்ஸ்பாம் (Oxfam) அறிக்கை, 2025-ஆம் ஆண்டில் அமெரிக்க பில்லியனர்களின் நிகர மதிப்பு 22 சதவீதம் உயர்ந்து, சாதனை அளவாக 8.2 டிரில்லியன் டாலர்களை எட்டியுள்ளதாகக் கண்டறிந்துள்ளது. எலோன் மஸ்க்கின் சொத்து மதிப்பு மட்டும் இப்போது 700 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது. இது பெரும்பாலான நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) விட மிக அதிகமாகும். ஒரு சில தன்னலக்குழுக்களின் கைகளில் இவ்வளவு செல்வம் குவிந்திருப்பது, தவிர்க்க முடியாமல் வெளிநாட்டில் போரையும் உள்நாட்டில் சர்வாதிகாரத்தையுமே உருவாக்குகிறது.
உலக சோசலிச வலைத் தளமானது (WSWS), நிகழ்வுகளைப் பற்றிய அதன் ஆழமான மற்றும் விரிவான செய்திகளிலும் பகுப்பாய்வுகளிலும் நிகரற்றது. இது மார்க்சிசக் கோட்பாட்டில் வேரூன்றி இருப்பதோடு, ஒரு நூற்றாண்டுக்கும் மேலான புரட்சிகரப் போராட்டங்களின் பரந்த அனுபவத்தால் செழுமைப்படுத்தப்பட்டுள்ளது.
வெனிசுவேலா மீதான ஆக்கிரமிப்பு முதல், உலக சோசலிச வலைத் தளம் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை முதலாளித்துவத்தின் தர்க்கத்துடன் இணைத்துக் காட்டியது. ரெனீ நிக்கோல் குட் கொல்லப்பட்டபோது, WSWS அவரது கொலையை ஒரு தனிப்பட்டவர் மீதான வன்முறையாகப் பார்க்காமல், பாசிசக் கொள்கையின் பின்னணியில் வைத்து விளக்கியது. உலக சோசலிச வலைத்தளம் வெறும் செய்திகளை மட்டும் வழங்குவதில்லை. அது, உலக அளவில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தலைமையை வளர்த்தெடுப்பதற்காகப் போராடுகிறது.
டிசம்பர் 12, 2025 அன்று, WSWS மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) இணைந்து சோசலிசம் AI என்ற ஒரு புரட்சிகரமான முன்முயற்சியைத் தொடங்கியது. இது முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான அறிவை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வழங்குகிறது. இலாபத்திற்காக அல்லாமல், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மார்க்சிசக் கோட்பாடு, புரட்சிகர வரலாறு மற்றும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வேலைத்திட்டங்களை அணுகச் செய்வதற்காக தொழிலாள வர்க்கத்தின் நலன் கருதி WSWS இந்த வலிமைமிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. நிகழ்வுகள் மிக அசாதாரண வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், உலகைப் புரிந்து கொள்ளவும், மாற்றவும் விரும்பும் எவருக்கும் புரட்சிகர பாரம்பரியத்தின் திரட்டப்பட்ட அறிவை சோசலிசம் AI எளிதாகக் கிடைக்கச் செய்கிறது. மேலும், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக அவர்களின் எதிர்ப்பை ஒருங்கிணைக்கவும் இது வழிவகுக்கிறது.
உலக சோசலிச வலைத் தளத்திற்கு வளங்கள் தேவைப்படுகின்றன. உங்களது நிதிப் பங்களிப்புகள் நேரடியாக அன்றாட முக்கிய நிகழ்வுகளின் செய்திகளுக்கும், பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் சோசலிசக் கல்வி உள்ளடக்கங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இவை, சோசலிசத்துக்காக போராடும் புதிய தலைமுறை போராளிகளை உருவாக்குவதில் இன்றியமையாத வகையில் பங்காற்றுகின்றன.
எங்களுக்கு உங்களது நிதி ஆதரவு தேவைப்படும் அதே வேளையில், நீங்கள் நேரடியாக இதில் ஈடுபடுமாறும் நாங்கள் உங்களை வலியுறுத்துகிறோம். உலக சோசலிச வலைத் தளத்தை நீங்கள் தினமும் வாசிப்பதையே, சோசலிசத்திற்கான போராட்டத்தில் உங்களின் நேரடிப் பங்கேற்பிற்கான அடித்தளமாக ஆக்கிக் கொள்ளுங்கள். சோசலிசம் AI-ஐப் பயன்படுத்துங்கள். எங்களுக்கு எழுதுங்கள், உங்கள் கேள்விகளுக்கு நாங்கள் பதிலளிப்போம். கூட்டங்களில் கலந்து கொள்ளுங்கள். தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை ஒருங்கிணைக்கவும், ஐக்கியப்படுத்தவும் தொழிற்சாலைகள், பணியிடங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை கட்டியெழுப்ப உதவுங்கள். இப்போது வெளிப்பட்டு வரும் நெருக்கடியை வெறும் பார்வையாளராக இருந்து தீர்க்க முடியாது. செயல்படத் தயாராக இருக்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் உணர்வுப்பூர்வமான தலையீட்டை இது கோருகிறது.
இந்த ஆண்டு அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் கையெழுத்திடப்பட்டதன் 250-வது ஆண்டு நிறைவு விழாவைக் குறிக்கிறது. அந்தப் பிரகடனம் சமத்துவத்தின் இலட்சியங்களையும், மனிதனின் பிரிக்க முடியாத உரிமைகளையும் அறிவித்தது. அந்தப் புரட்சிகரப் போராட்டத்தில் அறிவிக்கப்பட்ட கொள்கைகள் இப்போது புதுப்பிக்கப்பட்ட மற்றும் அவசரமான முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. இன்று சர்வதேச தொழிலாள வர்க்கமே மனித விடுதலையையும் விமோசனத்தையும் நோக்கிய போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறது. ஏகாதிபத்திய போருக்கு எதிராகவும், பாசிசத்திற்கு எதிராகவும், முதலாளித்துவ வர்க்கத்தின் சர்வாதிகாரத்திற்கு எதிராகவும் நடக்கும் இந்தப் போராட்டம், சோசலிசத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய போராட்டமாகும். இந்தப் போராட்டத்தில் இணையுங்கள். போர், சர்வாதிகாரம் மற்றும் சமத்துவமின்மைக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுங்கள்.
